பெங்களூர் குண்டு வெடிப்பு..! சிக்கிய 2 பேர்..!! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு..!!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இருவருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடித்தது. அதில் பலா் படுகாயமடைந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கில் முக்கிய நபா்களான முசாவீா் ஹுசைன் சாஹிப், அப்துல் மதீன் அகமது தாஹா இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர்கள் குறித்த தகவல் அளிப்பவா்களுக்கு 10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் எனவும் என்ஐஏ அறிவித்தது.
இந்நிலையில், கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டு பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், கைதான இருவருக்கும் 10 நாட்கள் என்ஐஏ காவல் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..