திருபத்துரில் கைதான போலி மருத்துவர்..!!
வாணியம்பாடி அருகே முறையான மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த நபர் கைது
தற்போது மருத்துவர்களின் எண்ணிகையை விட போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.., யார் மருத்துவர் என்று தெரியாமல் மக்கள் சில சமயம் சிக்கலில் சிக்கி கொள்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறி மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மாரிமுத்துவிற்கு கிடைத்த தகவலின் பேரில் மருத்துவ அதிகாரிகள் மதனாஞ்சேரி பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டனர்.
அப்பொழுது அப்பகுதியில் குகன் என்பவர் இயற்கை மருத்துவம் மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததுள்ளார். இந்த போலி மருத்துவரால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து மருத்துவ இணை இயக்குனருக்கு தகவல் கொடுக்கப்படுள்ளது.

தகவலின் பெயரில் வந்த அதிகாரி பொது மக்களை போல தன்னை காண்பிதுள்ளார். அப்பொழுது போலி மருத்துவர் குகன்.., பார்த்த போலி மருத்துவம் பற்றி தெரியவந்துள்ளது. எனவே உடனடியாக மருத்துவ அலுவலர்கள் இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குகனை கைது செய்தனர்.
Discussion about this post