திடீரென வெடித்த சத்தம்..!! அச்சத்தில் மராட்டிய மக்கள்..!!
மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது அதில் பயணித்த 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான AW 139 வகையை சேர்ந்த ஹெலிகாப்டர், மராட்டிய மாநிலம் பவுட் என்ற கிராமத்தில் விழுந்து விபத்து விபத்துக்குள்ளானது.
அப்போது ஹெலிகாப்டர் விழுந்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் குவிந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், மற்றும் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதை தொடர்ந்து 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஹெலிகாப்டர் விபத்தில் கேப்டன் ஆனந்த், டெய்ர் பாட்டியா, அமர்தீப்சிங், எஸ்.பி.ராம் ஆகியோர் காயம் அடைந்தனர்.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..