கர்நாடகாவில் முன்னாள் டி.ஜி.பி கொலையில் அதிர்ச்சி தகவர்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ், பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தில் உள்ள பிப்ராசி கிராமத்தைச் சேர்ந்தவர். புவியியலில் எம்எஸ்சி பட்டதாரியான இவர், ஜனாதிபதியின் காவல்துறை பதக்கம் பெற்றவர். இவருக்கும் மனைவி பல்லவிக்கும் பல ஆண்டுகளாக குடும்ப பிரச்னை இருந்துள்ளது. தனது மனைவியை துப்பாக்கியை கொண்டு சுட்டுவிடுவதாக ஓம் பிரகாஷ் அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில், அவரின் மனைவி பல்லவி தனது கணவர் ஓம்பிரகாஷை பெங்ஙளுரு வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளது. ஓம்பிரகாஷ் டைனிங் டேபிளில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, மனைலி வேண்டுமென்றே தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அவரது பிளேட்டில் இரு வகையான மீன்கள் இருந்துள்ளன. மனைவி பல்லலி மகள் ஆர்த்தி இருவரும் சேர்ந்து கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர், சடலத்தை பெட்சீட்டில் சுற்றி ஒரு அறையில் போட்டு வைத்துள்ளனர். பின்னர், போலீசாருக்கு பல்லவி கொலை குறித்து தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து, தாயும் மகளும் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை உயிர் போவதற்கு முன் ஓம் பிரகாஷ் போராடியுள்ளார்.
போலீசார் விசாரணையில், சின்ன ஒரு சண்டை வந்தால் கூட துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவதாக மிரட்டினார். அதனால்,, என்னை தற்காத்துக் கொள்ள கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஓம் பிரகாஷ் தனது மனைவியின் டார்ச்சரை தாங்க முடியவில்லை என்று சக அதிமகாரிகளிம் கூறி புலம்பியதாகவும் சொல்லப்படுகிறது.