ADVERTISEMENT
“அவிநாசி அருகே சாலை மற்றும் குடிநீர் போன்ற வசதிகள் செய்து தர கோரி போரட்டம்”
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, கழிவு நீர் வடிகால், குடிநீர் உள்ளிட அத்தியாவசிய தேவைகளை செய்து தர வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஊராட்சி தலைவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.