இதில் கூட பாசாங்கா..? ஆம் ஆத்மி எம்பிக்கு கிடைக்கும் ஆனா..!! திமுக எம்பிக்கு கிடையாதாம்..!!
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை வழக்கு அமலுக்கு வந்தது. அதாவது மது விற்பனை 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெற்றது. டெல்லியில் 32 மண்டலங்களில் 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் லைசன்ஸ் வழங்கப்பட்டு அதில் ஏராளமான முறைகேடுகள் நடந்த பின் மதுபானம் விற்பனை செய்ய லைசன்ஸ் மறுக்கப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மீ அதற்கு லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த ஊழல் வழக்கில் தான் ஆம் ஆத்மி கட்சியின் சில நிர்வாகிகள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர். அதே வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதே வழக்கில் கைது செய்யப்பட்டார். பின் நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவும் வெளியானது.
ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமலாக்க துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர் ஆனால் போதிய ஆதரங்கள் சமர்பிக்கத்தால் ஜாமீன் வழங்க மறுத்தது. அதன் பின் சஞ்சய் சிங்கின் ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்த நிலையில் தற்போது ஜாமீன் வழங்கி பணிகளை தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதே சமயம் இந்த உத்தரவை வேறு வழக்குகளுக்கு முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா மற்றும் பிபி வரலே அமர்வு கூறியிருந்தார்.
அதற்கு காரணம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியே வர முடியாமல் இருப்பதாலும் மற்றும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் பலமுறை ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தும். உயர்நீதிமன்றம் தர மறுப்பதும் தான் காரணம்.
அவரது ஜாமீன் மனு நேற்று .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அது குறித்து அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு :
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தாக்கல் செய்து இருந்தார். ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு, உத்தரவிட்டது.
மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பது தேவையற்றது என கூறி இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், இந்த வழக்கு தற்போது வருகிற 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..