“நூறு சாமிகள் இருந்தாளும் அம்மா உன்னை போல் ஆகிடுமா…” தாய்க்கு கோவில் எழுப்பிய மகன்கள்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை தம்பதியினர் கோவிந்தராஜ் கன்னியம்மாள் இவர்களுக்கு சண்முகம், முருகேசன், கேசவன், ஏழுமலை, செல்வி, கஸ்தூரி, ஷகிலா மேரி ஆகிய 7 மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர் இவர்கள் 7 பேரும் செல்வந்தர்களாக உள்ளனர் இதில் கடந்த 2023-ஆம் ஆண்டு கன்னியம்மாள் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் தனது 87 வயதில் உயிரிழந்தார்.
இதனை அடுத்து தாங்கள் குடும்பம் ஏழ்மையாக இருந்த காலத்தில் எவ்வித குறையும் இன்றி குறையும் இன்றி 7 பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்ததால் காவல்துறை அதிகாரி, மருத்துவர், பேராசிரியர் போன்ற உயர் பதவிகளில் உள்ளதாகவும், எனவே தங்களுடைய அம்மா தான் கண்கண்ட தெய்வம் என கூறி அதற்கு ஏற்ப அதே பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் ரூபாய் 1.50 கோடி செலவில் பிரம்மாண்டமாக மணிமண்டபத்தைக் கட்டி அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது..
அதுமட்டுமில்லாமல் நிலத்தில் அருகில் உள்ள நீர் நிலையில் 500 கிலோ எடையிலான தனது தாய் கன்னியம்மாளின் திருவுருவ சிலையை கொண்டு சென்று அங்கு அவருக்கு திதி கொடுக்கப்பட்டு ஊர்வலமாக தாரை தப்பட்டை ஒலிக்க மணிமண்டப வளாகத்திற்கு கொண்டு வந்து யாகசாலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கன்னியம்மாள் சிலையை பிரதிஷ்டை செய்து கருவறையில் வைத்து அதனை கன்னியம்மாளின் கணவரான கோவிந்தராஜ் கரங்களால் மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மனைவியின் சிலைக்கு தீபாரதனை காண்பித்து வணங்கினார்.
இதனைத்தொடர்ந்து கன்னியம்மாளின் 7 பிள்ளைகள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் அறுசுவை அன்னதானத்தை வழங்கி சிறப்பித்தார்கள் இச்சம்பவம் காரணமாக அந்த கிராமத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..