ஸ்க்ரப் டைபஸ் தொற்று நோய் பரவல்..!! இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா..?
தமிழகத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் தொற்று நோய் பரவல் அதிகரித்து உள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் முன்னச்சரிக்கை நடவடிக்கையால் இந்த நோய் தொற்று பரவல் தடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் எனும் தொற்று நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த பாக்ட்ரியா தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு போன்றவை முக்கிய அறிகுறிகளாக காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நோய்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..