சென்னை மலர் கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கம்..!!
சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி திருக்குறள் புகைப்பட கண்காட்சியை டிசம்பர் 31ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை அடுத்து வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து இன்று சென்னை செம்மொழிப் பூங்காவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து மேற்பார்வையிட்டார்.
இதில் பெரியவர்களுக்கு கட்டணம் 150 ரூபாயாகவும் சிறியவர்களுக்கு 75 ரூபாய் கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் 30 லட்சம் மலர்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலு, எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், நிலைக்குழு தலைவர் சிற்றரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இ.ஆ.ப., வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப, வேளாண்மைத் துறை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..