மதுரைக்கு 144 தடை உத்தரவு..!! திருப்பரங்குன்றம் விவகாரம் 8 பேர் கைது…!!
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோவில் முன்பு இன்று இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது. எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்தும், தங்களது கோரிக்கை மற்றும் பல்வேறு அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
மேலும் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி தலைவர் கற்பகவடிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..