“நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்…” மீண்டும் இணைந்த தம்பதிகள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி பிரகாஷ் தற்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டே இசையமைக்கும் வேலைகளையும் செய்து வருகிறார். அவரது இசையமைப்பில் கடந்த மாதம் வெளிவந்த அமரன் படம் 300 கோடி ரூபாய் வசூல் படமாகவும் லக்கி பாஸ்கர் 100 கோடி ரூபாய் வசூல் படமாகவும் அமைந்துள்ளது.
தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சி ஒன்று அடுத்த மாதம் டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் கோலாம் பூரில் நடைபெற உள்ளது. செலிப்ரேஷன் ஆஃப் லைஃப் என்ற தலைப்பு வைத்துள்ள அந்த நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவியும் பாடகியுமான சைந்தவியும் கலந்து கொண்டு பாட உள்ளார். அது பற்றிய வீடியோ அறிவிப்பு ஒன்றையும் சைந்தவி வெளியிட்டுள்ளார்.
அதில் ஜீவி பற்றி குறிப்பிடும் போது ஜிவி பிரகாஷ் சார் என்று குறிப்பிட்டுள்ளார். காதலித்து கல்யாணம் செய்து ஒரு பெண் குழந்தை பெற்ற பின்பு இருவரும் பிரிவதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர். அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இருந்தாலும் பிரிவுக்குப் பின்னும் இருவரும் எந்த சிக்கலும் இல்லாமல் ஒரு இசை நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்ளும் அளவிற்கு புரிதலுடன் இருப்பது அவர்களுடைய பக்குவத்தை காட்டுவதாக உள்ளது. இது பற்றி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
ஜீவியின் இசையில் சினிமாவிலும் சைந்தவி தொடர்ந்து பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு தான் அறிவிப்பு வெளியிட்டனர்..