20 ஆண்டுக்கு பின் மீண்டும் இணையும் ஜோடி…!!
கடந்த 2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியது என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா., இந்த படமே சூர்யா, த்ரிஷா இவர்கள் இருவருக்கும் பெஸ்ட் படம் என சொல்லலாம்.. அதன் பின் 2005ம் ஆண்டு வெளிவந்த ஆறு என்ற படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இருப்பார்கள்., அதன் பின் எத்தனையோ படங்கள் இவர்கள் நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் கூட வெளியாகவில்லை.
என ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்க ட்ரீட் கொடுக்கும் படமாக இப்படம் அமைந்துள்ளது.. நடிகர் சூர்யா அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் அவரது 45 வது பணத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகளை ஆர் ஜே பாலாஜி மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.