வேலூரில் வேலைவாய்ப்பு முகாம்..! மாவட்ட ஆட்சியரின் புதிய துவக்கம்..!
வேலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மற்றும் வாழ்வாதார இயக்கும் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் துவக்கம்
வேலூர் மாவட்டம்,வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்புத்துறை மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
இதில் மாநிலம் முழுவதுமிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டனர் வேலைவாய்ப்பை பெற இளைஞர்கள் அதிக அளவில் வந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த முகாமில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர் இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் வேலூர் மாவட்டத்தில் இன்றும் அக்டோபர் மாதமும் டிசம்பர் மாதம் மூன்று வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த படவுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக இங்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருக்க வேலைவாய்ப்பு உதவுகிறது. குடும்பத்தின் பொருளாதார சுமை என்பது குடும்பதலைவர் தலைவி இருவக்கும் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் முன்னுரிமை கொடுத்து வேலை வாய்ப்பையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது.
ஒரு காலத்தில் வேலை வாய்ப்பு என்பது அறிதாக இருந்தது அரசு நிறுவனங்களில் வேலைக்கு சேருவது என்பது மிகவும் கடினம் தகுதி வரையை ;போட்டி தேர்வுகள் ஆகியவைகளை கடந்து வந்தால் மட்டுமே போட்டி போட முடியும், எந்த வேலையும் எளிதில் கிடைக்க கூடிய சூழல் அன்றைக்கும் இல்லை, இன்றும் இல்லை.
இன்றைய முகாமில் 23 ஆயிரம் பேர் வேலைக்கு தேவை என ஆட்களை தேர்வு செய்கின்றனர். எட்டு மணி நேர வேலை என்பதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் வேலைவாய்ப்பு மூலம் வேலையை பெற்றால் பணியை நோக்கி தான் செல்ல வேண்டும்.
ஒரு சிலர் பொறுப்பை உணராமல் தட்டிகழித்து வேலைக்கு செல்வதில்லை இதுபோன்றவைகளும் உள்ளது 10 வருடம் நன்றாக வேலை செய்தால் அதுபற்றி தெரியும் நீங்கள் செல்லும் நிறுவனங்களில் நன்றாக வேலை செய்ய வேண்டும் என பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..