தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்..!! காஞ்சி கலெக்டரின் அறிக்கை..!!
காஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டர் “கலைச்செல்வி மோகன்” வெளியிட்டுள்ள அறிக்கையில் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்காக 100 சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசு அறிவித்துள்ளது.
அதன் பெயரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து படித்த இளைஞர்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் ஆகஸ்ட் 5ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்க போவதாக தெரிவித்துள்னர்.
இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும்.., திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வு நடத்த இருப்பதாக தெரிவித்தவுள்ளது.
இதில் பட்டதாரிகள், டிப்ளோமா மற்றும் ஐடிஐ படித்த மாணவர்கள் , 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என அனைவருக்கும் வேலை வாய்ப்பு முகாமை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
* நேர்முக காணலுக்கு வரும் மாணவர்களின் வயது 18 முதல் 35 வயதுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
* படித்த பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள், மற்றும் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என எடுத்து வர வேண்டும்.
* இந்த சான்றிதழ்களுடன் அரசு ஆவணமான ஆதார் நகலையும் எடுத்து வர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருந்தால் 044-27237124 என்ற எண்ணிற்கு அழைத்து சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..