தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு..! ஒரு யூனிட்டுக்கு இவ்வளவா..?
தமிழ்நாட்டில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தியோருக்கு ஒரு யூனிட்டுக்கு 4.60 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போதைய மின்கட்டணம் 4.80 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்று, அதிகபட்சமாக 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 11.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 11.80 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது.
அதே போன்று, 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவர்களுக்கு 6.15 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது கட்டணம் 6.45 ரூபாயாக மாற்றப்பட்டு்ள்ளது.
501 முதல் 600 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு ஏற்கெனவே 8.15 ரூபாய் பெறபட்டது. தற்போது 8.55 ரூபாயாக உயர்த்தபட்டுள்ளது
601 முதல் 800 யூனிட் வரையில் ஏற்கனவே ஒரு யூனிட்டுக்கு 9. 20 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 9.65 ரூபாயாக உயர்த்தபட்டது.
801 முதல் 1000 யூனிட் வரையில் முன்பு 10:20 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது 10.70 ரூபாய் உயர்தப்பட்டுள்ளது.
மேலும் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம், 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் 9.70 ரூபாயும், வாடகை ஒரு கிலோ வாட்டுற்கு 307 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது. தற்போது யூனிட் ஒன்றுக்கு 10.15 ரூபாயாகவும், வாடகை ஒரு கிலோ வாட்டுக்கு 322 ஆகவும் உயர்த்தபட்டுள்ளது.
112 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 562 ரூபாய் வாடகையாக வசூலிக்கபட்டு வந்தது. தற்போது 589 ரூபாயாக வசூலிக்கப்பட உள்ளது. புதிய மின் இணைப்பு பெறுவோருக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ