தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் கிராமம் ஓட்டையன் காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி இவருக்கு சொந்தமான ரூ 4 கோடி மதிப்புள்ள ஆறு ஏக்கர் நிலம் கொண்டரசம்பாளையம் கிராமத்திற்குள் உள்ளது முத்துசாமி இறந்து போன பின் இவரது மகன்கள் பழனிச்சாமி 65 ஈஸ்வரமூர்த்தி 60 ஆகியோர் தங்களது நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இதனிடையே பழனிச்சாமிக்கு அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டு கிராமத்தில் நடந்து செல்வோர் வருவோரையெல்லாம் அரிவாள் இரும்பு கம்பியால் மிரட்டுவது தாக்குவது உள்ளிட்ட அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்தார் மனநிலை பாதிக்கப்பட்ட இவர் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் கிராம மக்கள் பலமுறை புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் சென்னையில் உள்ள மனநல மருத்துவமனைக்கு இவரை அழைத்துச் சென்று அங்கு அனுமதித்தனர். இந்நிலையில் மனநல மருத்துவமனையில் இருந்த போதும் ஒரு கொலை சம்பவத்தில் பழனிச்சாமிக்கு தொடர்பு இருந்ததால் அங்கும் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்தும் வெளியே அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் தம்பி ஈஸ்வரமூர்த்தியின் தோட்டத்திற்கு வந்த பழனிச்சாமி தனக்கு சொத்தை பிரித்துக் கொடுக்க சொல்லி அடிக்கடி தகராறு செய்து வந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட பழனிச்சாமி இடம் சொத்தை பிரித்துக் கொடுக்க விருப்பம் இல்லாததால் தம்பி ஈஸ்வரமூர்த்தி சொத்தைப் பிரித்துக் கொடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் ஈஸ்வரமூர்த்தி தோட்டத்தில் பால் கறந்து அதை கேனில் எடுத்துக் கொண்டு பால் சொசைட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது கையில் அறிவாலுடன் அங்கு நின்று கொண்டிருந்த பழனிச்சாமி தனது அண்ணன் ஈஸ்வரமூர்த்தியை அறிவாளால் ஓட ஓட விரட்டினார் இதனால் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரமூர்த்தி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்.
தம்பியை கொலை செய்துவிட்டு அண்ணன் பழனிச்சாமி ஊரில் உள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் பற்றி அறிந்த தாராபுரம் போலீசார் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் தலைமறைவாக உள்ள பழனிச்சாமியை தேடி வருகின்றனர் கொலை செய்யப்பட்ட ஈஸ்வரமூர்த்திக்கு முத்துலட்சுமி, என்ற மனைவியும் வாணி 6 என்ற மகளும் ,இளங்கவி 7, என்ற மகனும் உள்ளனர், கொண்டரசம்பாளையத்தில் சொத்து தகராறில் உடன் பிறந்த அண்ணனே தம்பியை வெட்டி கொண்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post