மும்பையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் வசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அது பற்றி நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்பட்டது. மும்பையில் சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது தனது குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கோரிக்கைவிடுத்ததும் இணையத்தில் வைரலாக பரவியது.
இதன் ஒரு பகுதியாக நடிகர் சூர்யா மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் சொந்த வீடு வாங்கியிருப்பதாகவும், தனது மகளின் மேற்படிப்புக்காக இந்த வீடு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சூர்யா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தான் மும்பையில் செட்டில் ஆகவில்லை என்றும், தனது மகன் மற்றும் மகள் ஆகியோர் படிப்பிற்காக அங்கே இருக்கிறார்கள் அவ்வளவுதான் என விளக்கமளித்துள்ளார்