பட்டாசு விபத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!!!
நெமிலி அருகே சயனபுரம் கிராமத்தில் பட்டாசு விபத்தில் பள்ளி மாணவன் முகத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவர் கூலிவேலை செய்து வருகிறார்.இவரது மகன் நரேஷ், அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது வெடிக்காத பட்டாசுகளை சேகரித்து அதிலுள்ள மருந்துகளை புதிதாக பேப்பரில் மடித்து அதை தீ வைத்து வெடிக்க செய்யும்போது எதிர்பாராத விதமாக வெடித்து படுகாயம் அடைந்து மயக்கம் அடைந்தார்.
மாணவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முகம் கைகளில் படுகாயம் அடைந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.