தமிழ்நாடு சட்டப்பேரவையில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட துரைமுருகன்..!! வெளிநடப்பு செய்த வானதி ஸ்ரீனிவாசன்..!!
நதிகளை தேசிய மையமாக்க வேண்டும் என அணை பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் அதற்காக இந்த தீர்மானத்திற்கு வந்திருப்ப தாக சிலர் தெரிவித்திருந்தனர்..
பரபரப்பான இந்த அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி, முன்னாள் தலைமை செயலாளரும் சபாநாயகரும் ஆன எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மறைந்த எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கு பேரவையில் இரங்கல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கேள்வி நேரம் நிறைவடந்த நிலையில் காவிரி விவகாரத்தில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். பின் முதலமைச்சர் எடுத்து வந்த தனித்தீர்மானத்தை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தார்..
அதுகுறித்து பேசிய வானதி ஸ்ரீனிவாசன், தற்போதைய சூழலில் இந்த தீர்மானத்தில் எப்படி ஒன்றிய அரசு வலியுறுத்து கிறது என நீங்க எப்படி சொல்லலாம்.., அதே மாதிரி பாஜக மீது உங்களால் எப்படி விமர்சனம் செய்ய முடியும்..
பாஜக ஆட்சி செய்த போது இது மாதிரி எந்த வித சூழலும் நடந்ததேயில்லை அதை முதலில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மோடி அரசு பல விதமான நடவடிக்கை களை எடுத்து வருகிறது.
அங்கு உள்ள காங்கிரஸ் கட்சியை இங்குள்ள ஆளும் கட்சியோடு கூட்டணியில் வைத்துக்கொண்டால் கூட அங்கு ஆளும் மாநில அரசு மீது எந்த விதமான விமர்சனத்தையும் செய்யாமல், ஒன்றிய அரசு செயல்படுமா.
இங்கு இருக்கும் ஆளும் கட்சி, மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தது ஏன்..?, விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டை நடைமுறைக்கு கொண்டுவராமல் விட்டது ஏன்..? என கேள்வி எழுப்பினார்.
அப்போது எதிர்தரப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, கர்நாடகாவில் உள்ள பாஜக, காங்கிரஸ் அந்த மாநிலத்தில் முழுமையாக செயல் படுகிறார்களா..?
உங்கள் நிலைப்பட்டை வலியுறுத்தி சொல்ல வேண்டும், இன்னும் சொல்லப்போனால் ஒன்றிய அரசிடம் சொல்லி தண்ணீரை நாங்களே வாங்கித்தருவோம் என நீங்க சொன்னா எங்க மக்கள் இன்னும் சந்தோஷப்படு வாங்க என கூறினார்.
இவரை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், நீங்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு நிலைப்பட்டில் இருந்தால் எப்படி..? அதை எடுத்துக்காட்ட நான் ரொம்ப ஆவளா இருக்கேன்.
பாஜக தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஆனால் இந்த தீர்மானம் என்பது தற்போது முழுமையாக அதை முழுமையாக செயல் படுத்தாமல் இருக்கிறோம் என வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்..
அப்போது எதிர்தரப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களே பல்வேறு கருத்துகளை நீங்கள் எடுத்து சொல்லி உள்ளீர்கள். கருத்துகள் பேசப்படலாம், உங்கள் தீர்மானம் எந்த அளவில் நிறைவேற்றப் பட்டுள்ளது என்பதை நீங்கள் படிக்கும் பொழுதே அவர் புரிந்து கொள்வார்.
வானதி ஸ்ரீனிவாசன் பதில் பேச்சு :
நீங்கள் பாஜகவை குறைத்து பேசிவிட்டதால் நாங்கள் ஆதங்கம் ஆகி விட்டோம். நான் முதலமைச்சரை கேட்க விரும்புவது, ஒன்றே ஒன்று..
தமிழ்நாட்டுக்கு தண்ணீரே கொடுக்க கூடாது என சொல்லுபவர்களிடம் கர்நாடகாவில் உள்ள பாஜக அரசு தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதை மறந்துவிட யாரும் மறந்து விட வேண்டாம் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் இருக்கிறோம். இந்த தீர்மானத்தில் நதிகளை தேசியமயமாகா மாற்ற வேண்டும் என்பது அணை பாதுகாப்பு மசோதாவிற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்..
அப்போது குறுக்கிட்ட பேசிய அமைச்சர் துரைமுருகன், திமுக நதிகளை தேசியமயாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அல்ல மக்களுக்கும் விவாசயிகளின் நலனிற்கும் பாடுபடுபவர்கள்..
பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு :
அப்போது எதிர்த்து பேசிய வானதி சீனிவாசன், இந்த தீர்மானம் ஆனது முழுமையாக தீர்வை நோக்கியதாக இல்லாததால், எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. இங்கு உள்ள தலைவர்கள் வாக்குறுதி கொடுத்தால் இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிப்போம் என சொன்னார்.., அவையோர் அமைதியகா இருந்ததால் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..