திருமணத்திற்கு கண்டிஷன் போட்ட அப்பாவிற்கு நோ சொன்ன சாய் பல்லவி..!
நடிகை சாய் பல்லவி அவர்கள் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். பிரேமம் படத்தில் வரும் மலர் டீச்சர் எனும் ரோல் சாய் பல்லவிக்கு பெரும் ரசிகர்களை பெற்று தந்தது. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவிக்கு அடுத்ததாக தமிழிலும் படங்கள் கிடைக்க ஆரம்பித்தது. இப்போது தமிழில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ள அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சாய் பல்லவி நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்த சாய் பல்லவிக்கு சேனல் ஒன்றில் நடக்கும் நடன போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சாய் பல்லவி அந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு நடனத்திலும் தனது நடன திறமையால் அனைவரையும் கவர்ந்தார். சாய் பல்லவி வெளிநாட்டில் மருத்துவம் படித்திருப்பவரும் ஆவார்.
பிரேமம் படத்தில் அவர் நடித்திருக்கும் அலுப்பில்லாத நடிப்பால் அவருக்கு தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
அவர் நடிகைகளிடம் வலம் வந்துகொண்டிருந்த மேக்கப், அலங்கார உடை, பரு இல்லாத கன்னம் ஆகியவற்றில் இருந்து தனித்து காணப்பட்டார். நடிகைகள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே மாற்றினார்.
சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில் அவர் தனது திருமணத்தை பற்றி பேசியிருக்கிறார். அது நான் வயதுக்கு வந்தவுடன், நீ ஒரு படுகர் இனத்தை சேர்ந்தவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். எங்களுடைய கிராமத்தில் படுகர் இனம் இல்லாமல் வேறொருவரை திருமணம் செய்து கொண்டால் நல்லது கெட்டது என எதற்கு அழைக்க மாட்டார்கள்.
நான் சிலமாவிற்கு வந்த சில காலம் கழித்து என் அப்பாவும் நீ படுகர் இனத்தை சார்ந்தவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என என்னிடம் சொன்னார் ஆனால் நான் அவரிடம் உங்களுடைய கலாச்சாரத்திற்காக நான் அப்படியேல்லாம் செய்ய முடியாது என கூறிவிட்டதாகவும் சொன்னார்.