மதுபோதை மோகம்.. விபரீதத்தில் முடிந்த கணவன் மனைவி சண்டை..!! கைது செய்யப்பட மனைவி..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள முருக பவனம் பகுதி இந்திரா நகரில் வசித்து வரும் 45 வயதான கண்ணன். அதே பகுதியில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மோகனா தேவி வீட்டில் அருகே உள்ள சேமியா கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர்களுக்கு திருமணமாகி நிவேதா, மற்றும் மதன்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இப்படி இருக்க மதுபோதைக்கு அடிமையான கண்ணன் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு குடித்து விட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.. மேலும் மது அருந்திவிட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது., அடித்து சித்திரவதை செய்வது., குழந்தைகளை அடிப்பது போன்ற செயல்களில் கண்ணன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று குடித்து விட்டு வந்த கண்ணன், மோகனா தேவியிடம் சண்டையிட்டுள்ளார்.. இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கண்ணன் மோகனா தேவியை கத்தி எடுத்து கொல்ல முயற்சித்துள்ளார். இதனால் பயந்து போன மோகனா., கண்ணனை கீழே தள்ளியுள்ளார்.. அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தன்னை குத்தி கொலை செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் மோகனா, கண்ணனை அவரை குத்தி கொலை செய்துள்ளார்.. சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்..
தகவலின் பேரில் அங்குவந்த போலீசார் கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனை குத்தி கொலை செய்த மோகனா தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..