ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை தாக்கிய மதுபோதை ஆசாமிகள்..!
மது அருந்தியவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய ரோந்து காவலரை தாக்கியவர்கள் ஐந்து பேர் கைது.
சென்னை கொருக்குப்பேட்டை மணலி சாலை சுண்ணாம்பு கால்வை சந்திப்பு அருகே நேற்று இரவு ஜிப்சி ரோந்து வாகனத்தில் போலீசார் பிரகாஷ் மற்றும் பிரதாப் பணியில் சென்று கொண்டிருந்தபோது ஐந்து நபர்கள் சாலையில் மது குடித்துவிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களை ரோந்து வந்த போலீசார் வீட்டுக்கு செல்லும்படி அறிவுறித்தியுள்ளனர். அதனை பொருட் படுத்தாத அந்த மதுபோதை ஆசாமிகள் காவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் மது போதையில் இருந்த ரெசிடென்சி காலேஜ் இரண்டாம் ஆண்டு மாணவன் சந்தோஷ், தனியார் வங்கி ஊழியர் சஞ்சய், மெக்கானிக் பாலாஜி, ஆட்டோ ஓட்டுனர் பாலாஜி என்ற சென்ராயன், ஏசி மெக்கானிக் கார்த்திக் இணைந்து காவலர்களை தாக்கியுள்ளனர்.
இதனால் காயம் அடைந்த காவலர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிபோதையில் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..