போதைபொருள் விற்பனை..!! சிக்கிய 15 லட்சம்..!! கேரளா வாலிபரால் பரபரப்பான தரமணி..!!
சென்னையில் தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞரை தரமணி தனிப்படை போலீசார் கைது செய்து 2400 சிறு பிளாஸ்டிக் குப்பியில் அடைக்கப்பட்ட ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருள் விற்பனை நடைபெற்று வருவதாகவும் அதை கண்டறிந்து தடுக்கும் வகையில் சென்னை தரமணி சரக உதவி ஆணையாளர் சையது பாபு தலைமையில் தரமணி காவல் ஆய்வாளர் ராஜா, தலைமை காவலர்கள் மகேஷ், உதயகுமார், கர்ணா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கு வடமாநில இளைஞர்கள் மூலம் இந்த தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக கிடைக்கபட்ட தகவலை தொடர்ந்து தனிப்படை போலீசார் தரமணியில் உள்ள ஐடி நிறுவனங்களை கூர்ந்து கவனிக்க தொடங்கினர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் டைடல் பார்க் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வடமாநில இளைஞர் ஒருவர் வந்தபோது அவரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 23 வயதான சுஹெல் ஹுசைன் என்பது தெரியவந்தது.
சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வசித்து வந்த இந்த இளைஞர் திரிபுராவில் இருந்து சென்னைக்கு ரயில் பயணம் மூலம் ஹெராயின் போதை பொருளை தமிழ்நாட்டிற்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரிபுராவில் இருந்து சென்னைக்கு கூலி வேலைக்கு வருவது போன்று பையில் ஆடைகள் உள்ளிட்டவைகளை கொண்டு வரும்போது பையில் ஹார்லிக்ஸ் பாட்டிலில் உள்ளதை எடுத்துவிட்டு அதில் ஹெராயின் போதைப் பொருளை அடைத்து சாதாரணமாக பல லட்சம் மதிப்புடைய போதை பொருளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளார்.
குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கும், வடமாநில தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. ஒரு சிறு பிளாஸ்டிக் குப்பியில் 2 மில்லி அளவு ஹெராயின் போதைப் பொருளை அடைத்து அதை 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார் கைதான இளைஞர். ஒருமுறை திரிபுரா மாநிலத்திற்கு சென்று சென்னைக்கு கிராம் கணக்கில் மட்டும் ஹெராயின் போதைப் பொருளை கடத்தி வந்து சுமார் 10 முதல் 15 லட்சம் வரை சம்பாதிதுள்ளார் கைதான இளைஞர்.

ஹெராயின் போதைப் பொருளை சென்னை தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, அடையறு, திருவான்மியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது .
கைதான திரிபுரா மாநில இளைஞரிடமிருந்து விற்பனைக்காக 2400 சிறு பிளாஸ்டிக் குப்பியில் அடைக்கப்பட்டு வைத்திருந்த சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 130 கிராம் ஹெராயின் போதை பொருள் கைப்பற்றியுள்ளனர்.
பின்னர் சுஹெல் ஹுசைன் மீது வழக்கு பதிவு செய்த தரமணி போலீசார் அந்த இளைஞரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளை விற்பனை செய்த வடமாநில இளைஞரை கைது செய்து 15 லட்சம் மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்தும் அசத்திய தரமணி சரக உதவி ஆணையாளர் சையது பாபு தலைமையிலான தரமணி காவல் ஆய்வாளர் ராஜா, தலைமை காவலர்கள் மகேஷ், உதயகுமார், கர்ணா ஆகியோர் கொண்ட தனிப்படையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் ஐபிஎஸ் அருண் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..