பைக் ஸ்பீடா ஓட்டுறதே தப்பு… அதுலையும் இவரு பண்ணது இருக்கே…!!
நமக்கோ நம் பிள்ளைகளுக்கோ உயிர் மீதான பயம் என்பது விபத்து பற்றியதாகத்தான் இருக்கும். ஏனெனில், எந்த வியாதியையும் பணம் இருந்தால் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை உண்டு.
என் பையன் இரவில் வெளிச்சம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில் வந்துகொண்டிருந்தபோது திடீரென்று குறுக்கே வந்த ஒரு பாட்டியால் வண்டியை ரோட்டிலிருந்து திருப்ப, அது மண்ணில் சறுக்கி விட, முழங்கால் தரையில் மோதி ஃப்ராக்சர் ஆகி இரண்டு மாதம் பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டியதாகிவிட்டது.
MD படிப்பில் இரண்டு மாத லீவு என்பது கோர்ஸையே எக்ஸ்டண்ட் செய்யக்கூடும். சர்ஜரி செய்யாத பட்சத்தில் 40 வயதுக்கு மேல் கூட ஆர்த்ரிடிக்ஸ் வர வாய்ப்பு உண்டு.
ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்டுக்கு, அதுவும் ஜஸ்ட் மண்ணில் விழுந்து எழுந்தததற்கு இத்தனை விளைவுகள்.
நாம நிதானமா ஓட்டுனா கூட, இல்ல ரோடில் நடந்து போனா கூட இந்த சாகச naaய்ங்க திடீர்னு குறுக்க வந்திடுவாங்களோன்னு பயந்துகிட்டேதான் போக வேண்டி இருக்கு.
TTF வாசன் செய்யும் சாகசங்கள் சமூகத்தையே கெடுக்கும் ஒரு புற்றுநோய் போன்றது. எத்தனை ஃபாலோவர்ஸ்! அவர்களில் எத்தனை பேர் இதுவரை எத்தனை விதத்தில் அடிபட்டு என்னென்ன நிலையில் இருக்கிறார்களோ! இப்பொழுது வந்து ஒரு பேட்டி கொடுத்து ‘இந்த விபத்து தனக்கு நிறைய வாழ்நாள் ப்ரச்னைகளை ஏற்படுத்தி இருக்கிறது, இதை யாரும் ஃபாலோ செய்யாதீர்கள்’ என்று சொன்னால் பலரது வாழ்வு காப்பாற்றப்படும்.
எதெதற்கோ பாத்ரூமில் வழுக்கி விழ வைக்கும் போலீஸ், எதையாவது சொல்லி மிரட்டியாவது அப்படி ஒரு பேட்டியை கொடுக்க வைக்க வேண்டும்.
பெற்றோர் சார்பாக ஒரு வேண்டுகோள்…
பைக்கில் ஸ்டண்ட் செய்வது , வேகமாக செல்வது , ரேஸ் செய்வது , போக்குவரத்து விதிகளை மதிப்பது இல்லை. விதிகளை மீறி பைக்கை ஓட்டுவது இதற்கு பெயர் போனவர் தான் டிடிஎப் வாசன்.
2k Kids தொடங்கி பல இளைஞர்களுக்கு தவறான செயலை அதை செய்ய , பாலோ பண்ண இவர் போன்ற இளைஞர் ஒரு மோசமான முன்னுதாரணம். சாலை விதிகளை மதிக்காமல் இவர் வேகமாக கார் ஓட்டுவதாக இவர் மீது நிறைய புகார்கள் உள்ளனர். சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்திய அரசமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் பாசிச ஆட்சி நடந்து கொண்டிருக்க அது குறித்து இளைஞர்களை சிந்திக்க விடாமல் செய்யும் சினிமா நடிகர்கள் ஒரு பக்கம் இருக்க , டிடிஎப் வாசன் போன்ற நபர்கள் பைக்கை வேகமாக ஓட்டு என ஐடியா கொடுப்பதும் , அது பின்னால் இளைஞர்கள் தடும் புரள்வதும் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருகிறது..
இவரை முன்னுதாரணமாக எடுத்து வேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கி பலியான இளைஞர்கள் எத்தனை பேரோ?? அந்த இளைஞர்களை பெற்ற பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியுமோ…??
தவம் இருந்து பெற்ற பிள்ளைகள் மீண்டும் கிடைக்குமா..??
நாம் எது செய்தாலும் அதை பார்த்து இளைஞர்கள் பின் தொடர்வார்கள். அவர்களுக்கு நல்லதை சொல்லி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மனிதர் தான் சரியான வழிகாட்டி. ஆனால் டிடிஎப் வாசன் போன்றோர் இளைய தலைமுறைருக்கு எதை கற்றுக்கொடுக்கிறார்கள் ??
சென்னை – பெங்களூர் சாலையில் நேற்று இவர் வீலிங் செய்த போது விபத்து ஏற்பட்டு அடித்து தூக்கி எறியப்பட்டு உள்ளார். வீலிங் செய்வதை வீடியோ எடுத்துள்ளார். 2 முறை வீலிங் சரியாக செய்த டிடிஎப் 3வது முறையாக வீலிங் செய்த போது விபத்தில் சிக்கி இருக்கிறார். கையில் எலும்பு முறிவும் , தலையில் காயமும் , முதுகில் பலத்த காயமும் ஏற்பட்டு உள்ளது. ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அவரின் உயிர் தப்பியது.
கை முழுமையாக முறிந்ததால் கடுமையான வலி தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு நண்பர்களிடம் அழுததாக சொல்லப்படுகிறது. இயற்கை விரைவில் பூரண சுகத்தை வாசனுக்கு அளிக்கட்டும். அதே நேரத்தில் வருமுன் காப்பது சிறந்தது.
யூடியூப் மூலம் இளைஞர்களின் பாராட்டுக்களை பெறுவது , நிறைய சப்ஸ்கிரைபரை எடுப்பது , வீவ்ஸ் மற்றும் லைக்கை அள்ளுவது மட்டும் தொழில் இல்லை வாசன். இனிமேல் இது போல செய்யாமல் , பிற இளைஞர்களை தவறாக வழி நடத்தாமல் இருங்க. அதற்கு இயற்கை உங்களுக்கு நல்ல புத்தியை தரட்டும்.
இளைஞர்களே ! நாட்டில் எத்தனை மக்கள் பிரச்சினைகள் இருக்கு. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. நாட்டில் விவசாயம் அழியுது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வளங்கள் தாரை வார்க்கப்படுது. இது பற்றி எல்லாம் யோசிக்க வேண்டியது நம் பொறுப்பு.
இவை பற்றி நாம் சிந்திக்கவில்லை எனில் அடுத்து நாம் அடிமைகளாக இருப்போம். டிடிஎப் வாசனுக்கு நடந்ததை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு சாலை விதிகளை மதித்து நடங்கள். வேகமாக பைக் ஓட்டுவதை தவிருங்கள் ! போக்குவரத்து போலீஸ் சொல்வதை கேளுங்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது.
– யா. அருள் , எழுத்தாளர்.
குறிப்பு : பைக்கில் சாகசம் செய்ய உரிய பயிற்சி பெற்று , அரசு கொடுக்கிற மைதானத்தில் சாகசம் செய்யட்டும் மாறாக சாலையில் பயிற்சி செய்வது சட்டப்படி குற்றம். இந்த பதிவு பொதுநலனே தவிர ஒருவர் வேதனையில் குளிர் காய்வது அல்ல.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..