மதுரை மாநாடு உணர்த்தியது என்ன..?
பல லட்சம் பேர் பங்கேற்ற மதுரை கழக மாநாடு எழுச்சியுடன் நடந்து முடிந்துவிட்டது.
இந்த மாநாடு நமக்கும், நாட்டுக்கும் பல செய்திகளை சொல்லிவிட்டு சென்றிருக்கிறது..
மாநாடு நிறைவு பெற்றபின்னர் மதுரை மாநகர் மாவட்ட கழக தோழர்களும், தம்பி மணிகண்டன் பூமி நாதன் அவர்களும் நள்ளிரவு 12 மணி வரை திடலில் இருந்து உள்ளனர்.
மூன்று நுழைவாயிலும் வாழைக்காய் குலைகளுடன் கூடிய வாழை மரங்கள் நடப்பட்டு இருந்தன.
செங்கோட்டையில் இருந்து நாம் அனுப்பி வைத்த மலை வளங்களும் கட்டப்பட்டு இருந்தன.
மாநாடு முடிந்து மூன்று வாயில்கள் வழியாக வெளியே வந்த லட்சக்கணக்கான தொண்டர்களில் ஒருவர் கூட
ஒரே ஒரு வாழைக்குலையைக் கூட ஒடித்து கையோடு எடுத்து செல்லவோ, கையால் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு செல்லவோ இல்லை…
(அவ்வாறு நடந்து இருந்தாலும் சகஜமான நிகழ்வாக தான் அதை நினைத்து இருப்போம்)..
வியப்பு தரும் இதை தம்பி மணிகண்டனும் தோழர்களும் மறுநாள் காலை விமான நிலையம் புறப்பட்ட தலைவர் வைகோ அவர்களிடம் விவரித்தபோது தம் தொண்டர்கள் பின்பற்றிய ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கேட்டு நெகிழ்ந்து போனார் தலைவர் வைகோ.
மறுமலர்ச்சி திமுக எதைச் சாதித்ததோ இல்லையோ தமிழ்நாட்டு அரசியலில்
கட்டுப்பாட்டையும்,
ஒழுங்கையும் அதன் தொண்டர்களுக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறது என்பதற்கு அழகிய உதாரணமாயிற்று இந்நிகழ்வு …
கற்பித்த ஆசிரியர் தலைவர் வைகோ அவர்களுக்கே எல்லா புகழும் …
ம.தி.மு.க தி.மு. இராசேந்திரன்,
துணைப்பொதுச் செயலாளர்,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..