அதிரடியாக குறைந்த தங்கவிலை..!! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!
ஜூன் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்ததால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த விலை நிரந்தரம் இல்லாமல் சவரனுக்கு விலை ஏற்றம் இரக்கம் என இருந்து வருகிறது.
நேற்று சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து விற்றது. ஆனால் இன்று சவரன் விலை குறைந்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து சவரனுக்கு 44,400 ரூபாய்கும், ஒரு கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 5,550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, 36,368க்கும் , கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,546க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூபாய் 78.50 காசாகவும், கிலோ ஒன்றுக்கு 78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.