மகனின் படிப்பிற்காக உயிரை கொடுத்த தாய்..!
சேலத்தை சேர்ந்த பாப்பாத்தி என்ற பெண் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். கணவனை இழந்து வாழ்ந்து வந்த பாப்பாத்தி தனது ஒரே மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசையிலும் நம்பிக்கையிலும் மகனை கல்லூரியில் சேர்த்து இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த வழி இல்லாததால், விபத்தில் இறந்தால் மகனுக்கு படிக்க பணம் கிடைக்கும் என்று எண்ணி, சாலையில் சென்று கொண்டிருந்து பேருந்தில் மோதி நேற்றைய முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து எற்பட்டவுடன் சுற்றியிருந்த பொது மக்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து முதலுதவிக்கு முயற்சித்துள்ளனர், ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, பாப்பாத்தியின் மறைவுக்கு, மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாப்பாத்தியின் உருவப்படத்துக்கு, மலர் தூவி, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பலர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. மேலும் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் 95 பெரும் இணைந்து தங்கள் பங்களிப்பாக பாப்பாத்தியின் குடும்பத்தினருக்கு ரூ.10,000 நிதி உதவியை வழங்கினர்.
மகனின் படிப்பிற்காக தாய் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.