அதிரடியாக உயர்ந்த தங்கவிலை..!! இன்றைய சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?
ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.. அந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து விற்ற நிலையில் சவரன் விலை இன்றும் அதிகரித்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 43,760 ஆக விற்கப்படுகிறது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5470 ரூபாய் ஆக விற்கப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 35,848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் அதிகரித்து 4,481ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து 75.20 ஆகவும். வெள்ளி கிலோ ஒன்றுக்கு 75,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய விலையை விட இன்று தங்கம் விலை அதிகரித்து இருப்பதால்.., மக்கள் மிகவும் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்..
Discussion about this post