தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை..!! சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 30ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பொன்னேரி பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சில புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும்
ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக பட்ச வெப்பநிலையாக 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்சம் 81 டிகிரி பாரன் ஹீட் இருக்கும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால்.., அடுத்த 48 மணி நேரத்திற்கு மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிக்கை விடுத்துள்ளது.
Discussion about this post