ஆவின் பொருட்களின் அதிரடி விலை உயர்வு..!! ஆவின் நிறுவனம் கொடுத்த விளக்கம்..!!
ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் பொருட்கள் விலை உயர்வு..
பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் பால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகறித்தவாறு இருப்பதாலும், உற்பத்தி செலவும் அதிகரித்த காரணத்தால் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை உயர்வு அமல்படுத்த அவசியம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலையை விட ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்,
எனவே பொதுமக்கள் அனைவரும் தரமான ஆவின் பால் உபபொருட்களை பயன்படுத்தி சுமார் 4.5 இலட்சம் தமிழக பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
Discussion about this post