ஒருவரின் உடையை பார்த்து ஏளனமாக நினைக்காதே..! குட்டி ஸ்டோரி-27
ஒரு நகை கடையின் வாசலின் வெளியே செருப்பு தைக்கும் மனிதன் ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார்.., அப்போது அந்த நகைகடையின் உள்ளே செல்வந்தர் ஒருவர் நகைகளை வாங்கி கொண்டு கடையின் வெளியே வந்து போன் பேசிக்கொண்ட படியே நின்றுள்ளார்..,
அப்போது அவரின் பாக்கெட்டில் இருந்த பணம் கீழே விழுந்து விடுகிறது.., இதை பார்த்த அந்த மனிதர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த செல்வந்தரிடம் கொடுப்பதற்காக போகிறார்.., அப்போது அந்த செல்வந்தர் இவர் பணத்தை திருடுவதாக நினைத்து அந்த மனிதரை போட்டு அடிக்கிறார்..
இதை பார்த்த அந்த நகைகடை உரிமையாளர்.., அந்த செல்வந்தரிடம் வந்து, சார் ஒரு நிமிடம் உள்ளே வாங்க உங்க கிட்ட ஒன்னு காட்டணும் சொல்லி அழைத்துக்கொண்டு போய் நடந்த காட்சிகளை கடைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியை காட்டுகிறார்.
பின் செய்த தவறை உணர்ந்த அவர் அந்த .., மன்னிப்பு கேட்டு இந்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.., எனக்கு வேண்டாம் ஐயா.., நான் ஒரு செருப்பு தைத்தால் 50 ரூபாய் கிடைக்கும்.., அதுவே ஷூவிற்கு பாலிஷ் போட்டால் 10ரூபாய் கிடைக்கும்..,
நான் உதை வாங்கி நீங்கள் எனக்கு கொடுக்கும் பணத்தை விட.., நான் உழைத்தால் நீங்கள் எனக்கு கொடுக்கும் பணம் தான் எனக்கு பெரியது என சொல்லி அங்கிருந்து சென்று விடுகிறார்.. இதை கேட்ட அந்த செல்வந்தர் அடுத்த நாளே அந்த செருப்பு தொழிலாளிக்கு ஒரு சிறு செருப்பு கடை ஒன்றை வைத்து கொடுத்து..,
தம்பி இத நீங்க உழைப்புக்கும் நேர்மைக்கும் கொடுக்கும் பரிசாக வைத்துக்கொள்ளுங்கள் என கொடுக்கிறார்.. அதுமாதிரி தாங்க நம்ப வாழ்க்கையிலையும் நம்பள பாத்து அடுத்தவங்க கேவளமா நினைத்தாலும்.., நாம் அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படாமல் இருந்தால்.., அதற்கான பலன் கட்டாயம் ஒருநாள் கிடைக்கும்..
இதையும் படிக்க மறக்காதீங்க : எல்லாரும் ஒற்றுமையாக இருந்தா வெற்றி உறுதி..
Discussion about this post