கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் பரிதாபமாக காலமானார்.
தாய்லாந்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் ராகவேந்திராவின் மனைவிக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் நாளை பெங்களூரு வந்து சேரும் என்றும், அங்கு தேவையான அனைத்து சடங்குகளும் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ராகவேந்திராவுக்கும் ஸ்பந்தனாவுக்கும் 26 ஆகஸ்ட் 2007 அன்று திருமணம் நடைப்பெற்றது. ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையர் பி.கே. சிவராமின் மகள் ஸ்பந்தனா துளு வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
விஜய்யின் உறவினரான புனித் ராஜ்குமார், கன்னட நடிகர் ஆவார், அவர் அக்டோபர் 2021 இல் மாரடைப்பால் காலமானார். பிரபல கன்னட நடிகர் மறைவிற்கு கன்னட திரையுலகம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.