உங்க வீட்டு ஏசி(AC ) விட மீட்டர் அதிகமா ஓடுதா? அதை சரிசெய்ய இப்படி பண்ணுங்க.
சாதாரணமாக சிலர் ஏசியில் தான் இருப்பார்கள். அதிலும் கோடைக்காலம் என்றால் ? அதிலும் ஒரு சிலர் ஏசியை என்றும் இயக்க நிலையிலே வைத்து இருப்பார்கள். இதனால் மின் கட்டணம் அதிகமாக இருக்கும்.
அப்படி எப்பொழுதும் இயக்க நிலையில் இருந்தாலும், மின் கட்டணம் குறைய இப்படி செய்து பாருங்க.
ஏசியை எப்பொழுதும் குறைந்த வெப்பநிலையில் வைத்து இருக்க கூடாது. 16 டிகிரி யில் இருந்து 18 டிகிரி குள் வைத்தால் நல்ல குளிர்ச்சியாக இருக்கும் என அனைவரும் அதை உபயோகிக்கின்றனர்.
அனால் சில ஆய்வியல் கூறுகள் மனித உடலில் 24 டிகிரி வெப்பம் இருப்பதால். உங்கள் ஏசியை 24ல் வைக்க வேண்டும் என கூறுகின்றனர். மேலும் ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் போது, மின்சாரம் சேமிக்கப்படும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிர் காலத்தில் ஏசியை உபயோகிக்காமல் விட்டுவிட்டு, கோடை காலத்தில் பயன் படுத்தினால், அது பழுது அடையும், இயங்கமால் இருக்கும் பொழுது, சுற்றி இருக்கும் தூசுக்கள் அதில் படிந்து விடும். பின் நாம் உபயோகிக்கும் பொழுது அந்த மாசு காற்று கலக்காமல் இருக்கும்.
இதை சரி செய்ய, ஏசியை சர்வீஸ் செய்வது நல்லது. ஏசியை ஆன் செய்யும் முன் அனல் காற்று உள்ளே வராத அளவிற்கு செய்து விட்டு ஏசியை ஆன் செய்ய வேண்டும்.
இல்லையேல் ஏசி அதிக டிகிரியில் செயல் படுத்தப்பட்டு மின் கட்டணம் அதிகரிக்கும்.