நீங்க பார்க்க மற்றும் படிக்க மறந்த முக்கிய செய்தியை பார்க்க.. ஜஸ்ட் ஒரு க்ளிக்…!
1. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சொல்வதைச் செய்வான் கலைஞர் மகன் என்பதற்கு மகளிர் உரிமைத்தொகை திட்டமே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..
2. மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு -12 தீர்மானங்கள் நிறைவேற்றம்..
3. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு… நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு..
4. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. எந்த வழக்காக இருந்தாலும் உரிய வழிமுறைகளை வழக்கறிஞர்கள் பின்பற்றவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தல்..
5. ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் நான்காவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்வு.. அதித்யா விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தகவல் …
Discussion about this post