“மருத்துவரின் அலட்சியம்..” பறிபோன உயிர்…!! பரபரப்பான வேலூர்..!!
வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அருகேயுள்ள கேசவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பொன்னுதுரை (55) இவர் கடந்த 4 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கேசவபுரம் நோக்கி சென்ற போது நாய் ஒன்று குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் மோதியது இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மேஸ்திரி பொன்னுதுரை நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதன் பின்னர் இவர் சி.எம்.சி மருத்துவமனைக்கு எடுத்து சென்று அங்கு டாக்டர்கள் அதிக பணம் கேட்டதால் மீண்டும் சித்தேரி பகுதியில் உள்ள பிரேம் குமார் என்ற நரம்பியல் மருத்துவர் நடத்தும் பிரேம் ஜி மருத்துவமனையில் கடந்த 4 ஆம் தேதியே சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தவறான அறுவை சிகிச்சை செய்துவிட்டதாக கூறி மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையை செய்தனர். கடந்த 11 நாட்களாக உறவினர்கள் கூட நோயாளியை பார்க்க அனுமதிக்கவில்லை செயற்கை சுவாசம் பொருத்திய நிலையில் இன்று காலை அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராமத்து மக்கள் அவரது உடலை வாங்க மறுத்ததுடன் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் மது போதையிலிருந்த மருத்துவர் பிரேம் குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அழைத்து வந்து சமாதானப்படுத்தினார்கள் தவறான அறுவை சிகிச்சையால் கட்டிட தொழிலாளி இறந்ததாக கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதுவரையில் இம்மருத்துவமனை இறந்த நோயாளியின் உறவினர்களிடம் பணம் 2.80 லட்சம் வசூலித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..