தேன் சேகரிக்கச் சென்ற சிறுவனின் காதுக்குள் தேனீ புகுந்ததும், அதனை மருத்துவர் உயிருடன் வெளியே எடுத்த விநோத சம்பவமும் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் தேன் எடுக்க சென்ற மோகன்பாபு என்ற பத்தாம் வகுப்பு மாணவனின் காதுக்குள் தேனீ புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதுக்குள் புகுந்த தேனீ சிறுவனை நன்றாக கொட்டியுள்ளது. இதனால் வலியால் துடித்த மாணவனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் உயிருடன் இருந்த தேனீயை சிறுவனின் காதுக்குள் இருந்து எடுத்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தேனீ கொட்டியதில், மேலும் 2 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post