உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உறவை பேண விரும்புகிறீர்களா? அப்ப இத ட்ரை பண்ணுங்க..!!
நம் உறவுகளை சிறந்த வழியில் வழி நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. உங்கள் துணையுடன் ஒன்றாக நேரம் செலவிடுவது, பெற்றோருடன் நேரம் செலவழிப்பது இப்படி நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சில சமயங்களில் கணவன் மனைவிகளுக்கிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், காதலி மற்றும் காதலன்களுக்கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் வாக்கு வாதங்கள் என ஏராளமான சவால்களை நாம் சமாளிக்க வேண்டியது உள்ளது.
ப்யூ ரிசர்ச் சென்டர் ஆய்வின்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று டேட்டிங் மற்றும் காதல் உறவுகள் கடினமாக இருப்பதாக அனைத்து அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் மக்கள் உறவுகளுக்கு நேரத்தை செலவழிக்காமல் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே உங்கள் ஆரோக்கியமான உறவை எந்நாளும் நீங்கள் பேண நினைத்தால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
உறவுக்கு இடையே தகவல் தொடர்பு முக்கியம் எல்லா உறவுகளுக்கும் அடித்தளமாக இருப்பது தகவல் தொடர்பு ஆகும். கணவன் மனைவிகளுக்கிடையே சரியான தகவல் தொடர்பு இல்லாத தம்பதிகள் நிறைய பேர் விவகாரத்து வாங்குவதாக அமெரிக்கா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே கணவன் மனைவிகளுக்கிடையே தகவல் தொடர்பு மிகவும் அவசியம். ஒருவருக்கொருவர் உட்கார்ந்து பேசுவது அவசியம். உங்கள் மனதில் உள்ள விஷயங்களை உங்கள் துணையுடன் கலந்துரையாடுவது மிகவும் நல்லது.
உங்கள் துணைக்கு ஒரு அழகான குறுஞ்செய்தியை அனுப்புவது, வேடிக்கையான வீடியோ அனுப்புவது போன்ற எளிய விஷயங்களை செய்து வரலாம். இது உங்கள் உறவை மேம்படுத்த உதவுகிறது.
உங்கள் உரையாடல் ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருந்தால் நல்லது தம்பதிகள் தங்களுக்கிடையே எப்படி வாதிடுகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். தம்பதிகள் எப்பொழுதும் மரியாதையுடனும். அதே நேரத்தில் கண்ணியத்துடனும் உரையாட வேண்டும்.
அதே நேரத்தில் தங்கள் துணையின் பேச்சையும் காது கொடுத்து கேட்க வேண்டும். உங்கள் துணையின் பேச்சை நீங்கள் கவனமாக கேட்பது உங்கள் உரையாடலை ஆக்கப்பூர்வமாக மாற்றுகிறது.
அதே நேரத்தில் உரையாடலில் ஈடுபடும் போது உடலியல் தொடர்பு இருப்பது நல்லது. கைகளை பிடித்து பேசுவது, ஒன்றாக நெருங்கி அமர்ந்து பேசுவது போன்றவை உங்கள் இருவருக்கிடையேயான உறவை பலப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் தம்பதிகள் இணைந்திருப்பதாகவும் நேசிக்கப்படுவதாகவும் உணர்கிறார்கள்.
நெருக்கம் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது கணவன் மனைவி களுக்கிடையேயான உறவில் உடல் நெருக்கம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்கள் இருவருக்கிடையேயுள்ள தனிப்பட்ட தேவைகளை வெளிப்படுத்துவது அவசியம்.
எனவே உடல் நெருக்கம் உங்கள் இருவருக்கிடையேயுள்ள பிணைப்பை அதிகரிக்கிறது. ஒரு வேளை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நெருக்கம் சரியாக இல்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த 5 ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் கிடைக்கும் அதிர்ஷ்டமே இல்லையாம். எப்பவும் தனியா இருக்கறதுதான் இவங்க விதி
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..