மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறினார்.
பிரதமர் மோடி தலைமையில், நேற்று மாலை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எம்.பிக்கள் ஒன்றிய அமைச்சர்கள் மாற உள்ள நிலையில் இதற்கான நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனிய காந்தி வருகைப் புரிந்தார்.
அப்போது, அவரிடம் மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சோனியா காந்தி, “மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது” என்றார்.
Discussion about this post