“யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” நினைவில் இருக்கிறதா..?
2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவரின் சிலையை உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் சங்கராச்சார்யா சவுக்கில் நிறுவுவதற்கு சாதுக்கள் அனுமதி மறுத்தார்கள் அதனால் அந்தச் சிலையை பிளாஸ்டிக்கில் சுற்றிய நிலையில் வனத்துறை விடுதி வளாகத்தில் வைக்கும் சூழல் ஏற்பட்டது.
உலகப் பொது முறையான திருக்குறளை உலகுக்கு அளித்த பேராசான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பொதுமை பேசிய மானுடன்.
அவரது பிறப்பு பற்றிய கட்டுக்கதைகளும் கற்பிதங்களும் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் குறுகிய மனப்பாங்குமே வள்ளுவர் சிலைக்கு இடம் மறுத்த வெறுப்புணர்வுக்கு காரணம்.
இந்தியாவின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கம்பீரமாக நிற்கும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையையும் அதே பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த விவேகானந்தர் பாறையையும் நினைத்துப் பார்க்கிறேன்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தும் வாழ்வியல் நெறி. இந்த இரு படங்களும் இந்திய சமூகத்தில் நிலவும் இரு வேறு கோட்பாடுகளுக்கு வாழ்வியல் அணுகு முறைகளுக்கு சான்றாக நிற்கும் குறியீடுகள் ஆகும்.
குறியீடுகள் முக்கியமானவை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..