வாழை படம் பார்த்த முதல்வர்… என்ன சொன்னார் தெரியுமா..?
மாரி செல்வராஜ் இயக்கத்தில், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் வாழை. வாழை தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை இல்லாத வகையில், ஒருத்தர்விடாமல், படத்தை பார்த்த அனைவரும், கண்ணீருடன் தான் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அமெரிக்காவில் வாழை திரைப்படத்தை பார்த்துள்ளார். இதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவர் “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழை திரைப்படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன்.
படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி. பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன்.
காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.