விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்த அஜித்.. மகிழ்திருமேனியிடம் என்ன சொன்னார் தெரியுமா?
விடமுயற்சி:
கோலிவுட்டில் ரசிகர்களை நடிப்பில் மிரட்டி வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லியும் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விடமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த அப்டேட்டும் வெளிவரமால் இருந்த நிலையில் இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. பின்னர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் ஷீட்டிங் பாதியிலேயே நின்றது.
பின்னர் மீண்டும் அஜர்பைஜானில் துவங்கிய படப்பிடிப்பு எடுக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் சென்னைக்கு திரும்பிய படக்குழு மீதமுள்ள காட்சிகளை சென்னை மற்றும் வேறுமாநிலங்களில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
ட்ரோல்களை சந்தித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்:
சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ட்ரோல்களை சந்தித்தது. இதனைதொடர்ந்து அவர்களின் வாயை பிளக்கும் விதமாக அடுத்தடுத்த இரண்டு போஸ்டர்கள் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பாசிடிவ் விமர்சனத்தை பெற்றது.
மகிழ்திருமேனியை பாரட்டிய அஜித்:
இந்நிலையில் விடாமுயற்சி படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இதுவரை எடுக்கப்பட்ட ரஷ் காட்சிகளை அஜித் சமீபத்தில் பார்த்துள்ளாராம்.
மேலும் அதனை பார்த்துவிட்டு படம் ”ஹாலிவுட் தரத்தில் சிறப்பாக வந்திருக்கிறது என்று மகிழ் திருமேனியை பாராட்டிய அவர் என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்துவிட்டதாக” அஜித் கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட சந்தோஷத்தில் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”