சிவபெருமானுக்கு பிடிக்காத செயல்கள் எது தெரியுமா..? இது பாவச் செயல்களில் சேரும்..!
நாம் தெரிந்தும் தெரியாமலும் நம்மை அறியாமல் பல செயல்கள் செய்கிறோம்.. அதாவது நன்மை தரக்கூடிய செயல்கள் என்றாலும்.., நம்மை அறியாமல் செய்யும் சில செயல்கள் அது பாவச் செயல்களாக மாறிவிடும்.
அந்த பாவச் செயல்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்..
* கர்ப்பிணி பெண்கள் துன்புறுத்துவது அதாவது ஒரு சிலர் கர்ப்பமாக இருக்கும் பெண் என்று கூட பார்க்காமல் அவர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்வார்கள். அவர்களை திட்டுவது, உணவு தராமல் இருப்பது.., அதிக வேலைகள் கொடுத்து தொந்தரவு செய்வது.
* பழி போடுவது.., நாம் செய்த தவறை மற்றவர்கள் மீது போடுவது, அல்லது அவர்கள் தவறே செய்யவில்லை என்றாலும், அதை அவர்கள் தான் செய்து இருப்பார்கள் என கூறுவது.
* நமக்கு சொந்தமான ஒன்றை மற்றவரிடம் வீட்டுக் கொடுக்கலாம்.., அது பொருளாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி, ஆனால் மற்றவர்களின் பொருள் மேல் ஆசை வைப்பது தவறு என்பதை விட அதை தனக்கு சொந்த மாக்கி கொள்ள முயற்சிப்பதும் பாவ செயல்களில் ஒன்றாகும்.
* பெண்களை கொடுமை படுத்துவது.., நூற்றில் 10 பேராவது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது.., அல்லது திருமணம் செய்துக்கொண்டு கொடுமை செய்வது அடிப்பது சித்திரவதை செய்வது போன்ற செயல்களை செய்தால் அதுவும் பாவச் செயல்களில் சேரும்.
இந்த பாவச்செயல்களை செய்து விட்டு நாம் எவ்வளுவு தான் சிவ பெருமானிடம் மன்னிப்பு கேட்டாலும் அதை அவர் .. மன்னிக்க மாட்டார் என்று புராணங்கள் கூறுகின்றது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..