இனிமே ஞாயிற்றுக்கிழமை அன்று இதை செய்து பாருங்க..!!
ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலானோர் செய்வது அதிக நேரம் தூங்கி விட்டு.. அசைவம் சாப்பிட்டு பொழுது போக்கிகொண்டு இருப்பார்கள்.., அது தவறில்லை வாரத்தில் ஆறு நாள் உழைத்து விட்டு அன்று ஒருநாள் கிடைக்கும் லீவில் ஒய்வு எடுக்கலாம்.., ஆனால் ஒருசிலர் ஓய்வே எடுக்காமல் தினம் தினம் உழைத்துக்கொண்டு இருப்பார்கள்.
அப்படி ஓயாமல் உழைப்பவர்களுக்கும் வீட்டில் ஓய்வு எடுபவர்களுக்கும் ஒரு சிறிய தகவல்.., இன்றைய நாளில் இருந்தே இதையும் செய்து பாருங்கள்..
ஞாயிற்றுக்கிழமை அன்று காலை எழுந்து குளித்து முடித்து விட்டு, வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கலாம். காகத்திற்கு உணவு வைப்பது, வீட்டில் செல்ல பிராணிகளை தவிர்த்து.., மற்றொரு ஜீவராசிக்கு உணவு கொடுக்கலாம், அது அன்றைய நாள் முழுவதும், மனதிற்கு மகிழ்ச்சி தரும். மேலும் தொடர்ந்து ஜீவராசி களுக்கு உணவு அளித்தால், வீட்டில் உணவை நிலைத்து இருக்கச்செய்யும்.
மாலை நேரத்தில் அதாவது மாலை 5 மணிக்கு மேல் சூரியன் முன் சில நிமிடங்கள் நின்றாள்.., அன்றைய நாளுக்கான களைப்பை நீக்கி விடும்.
ஒரு சிலர் ஞாயிற்றுக்கிழமை அன்று சுபகாரியங்கள் நடத்துவார்கள்.., ஒரு சிலர் சுபகாரியங்கள் செய்யலாமா..? வேண்டாமா என்ற தயகத்தில் இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து சுபகாரியங்களும் செய்யலாம்.
வீட்டில் எப்பொழுது பிரச்சனையாக இருக்கிறது என நினைப்பவர்கள் ஹோமம் வளர்க்கலாம், விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் விதை விதைப்பது.., விளைச்சல் அறுவடை செய்வது போன்ற காரியங்கள் செய்யலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post