காட்டேரியை ஏன் கர்ப்பிணி பெண்கள் வழிபடக்கூடாது காரணம் தெரியுமா..?
காட்டேரி அம்மன் என்பவர் பார்வதி தேவியின் மறு அவதாரம் தான்.., பார்வதி அம்மனுக்கு சில நாட்களாக பிணங்களை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்து விடும்.., இதனால் இரவு நேரத்தில் சிவபெருமானுக்கு தெரியாமல் பார்வதி தேவி சுடுகாட்டிற்கு வந்து பிணங்களை சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார்.
தினமும் இரவில் சிவபெருமானுக்கு தெரியாமல் பிணங்களை சாப்பிட்டு விட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் பார்வதி தேவி.., ஒரு நாள் சிவபெருமான் இரவில் பார்வதி எங்கே செல்கிறார் என பின் தொடர்ந்து வந்து பார்த்த பொழுது கருப்பு உருவமாக பிணங்களை சாப்பிட்டு கொண்டு இருக்கு.., அதை பார்த்த சிவன் பேர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின் பார்வதி தேவியிடம் சென்று நீ செய்வது தவறு.., உன்னை நாடி வரும் பக்தர்களின் குறையை தீர்க்கும் நீ இப்படி செய்யலாமா..? அது தவறு என கூறி, இந்த எண்ணங்களை இங்கேயே புதைத்து விட்டு என்னுடன் நீ கயலாயம் வா.., என சொன்னார்.
பார்வதி தேவியும் சிவபெருமான் வார்த்தைக்கு இணங்க.., அந்த எண்ணங்களை அங்கேயே புதைத்து விட்டு சென்றுள்ளார்.., அப்படி புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோன்றியவர் தான் “காட்டேரி”.., அவரை வீட்டிற்கு உள்ளே வைத்து யாரும் வழிபாடு செய்வது கிடையாது.., வீட்டிற்கு வெளியேயும் சுடுகாட்டில் வைத்து தான் வழிபாடு செய்வார்கள்.
கர்ப்பிணி பெண்கள் வணங்க கூடாது என சொல்வதற்கான நோக்கம்.., காட்டேரிக்கு இளம் சூடான ரத்தம் மற்றும் உயிர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.., எனவே காட்டேரி குலதெய்வமாக இருக்கும் வீட்டில் யாரவது கர்ப்பம் தரித்திருந்தால்..,
அவர்கள் ஆடு அல்லது கோழியை காவு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காமல் விட்டால் மட்டுமே முதல் உயிரை காட்டேரி எடுத்துக்கொள்வர்.., அல்லது காவு கொடுக்கும் வரை கரு கலந்து விடும் என்பது ஐதீகம்.
காட்டேரி குலதெய்வம் அல்லது இல்லத்தில் கர்ப்பமாக இருக்கும் கர்ப்பிணி பெண்கள்.., அந்த சமையத்தில் கருப்பு உடை அணிவது மற்றும் கருப்பு உடை அணிந்து கொண்டு நண்பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..