தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை எந்த மாவட்டங்களில் தெரியுமா..?
தமிழ்நாட்டில் சில தினங்களாக கனமழையும் .., சாரல் மழையும் பெய்து வருகிறது. இன்னும் ஐந்து நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் இரண்டு வாரங்களில் மட்டும் பல நாட்களாக வெப்பம் 40 டிகிரி செல்ஸியஸ் இருக்கும் நிலையில் வானிலை நிலவரம் மாறி மாறி மழை பெய்து வருவது வெப்பத்தின் தாக்கத்தில் இருந்த மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்த நிலையில், குறிப்பாக கடந்த சில தினங்களாக விட்டு விட்டு சாரல் மழையும், ஒரு சில இடங்களில் பரவலான மழையும் பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவதால், வானிலை ஆய்வு மையம் தற்போது மற்றொரு தகவலை வெளியிட்டுள்ளது. நேற்று இரவு சென்னையில் கனமழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டி இருக்கும் நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுவது, இன்று முதல் இன்னும் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்.
நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் மற்ற இடங்களில் வானம் மேக மூட்டத்துடனும் இருக்கும் எனவும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மட்டும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேக திசை மாறுபட்டு இருப்பதால் மீனவர்கள் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கேட்டு கொண்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பல மாவட்ட செய்திகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post