பிரதமராகும் எண்ணம் இருக்கிறதா..? நச் பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!
வருங்காலத்தில் பிரதமராகும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நச் பதிலடி கொடுத்துள்ளார்..,
நாடளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் பாஜகவிற்கு எதிராக பல காட்சிகள் ஒன்றிணைந்து “இந்திய கூட்டணியை” பலப்படுத்தி வருகின்றனர்.. இந்த இந்திய கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மீ காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மற்றும் திமுகவை மட்டுமே குறிவைத்து கடும் விமர்சனம் செய்து வருகிறது..
வடமாநிலங்களில் பிரதமர் மோடி பேசும்பொழுது, திமுகவை பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தேசிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது..
கிங் மேக்கர் ஸ்டாலின் :
நாடு முழுவதும் பல கட்சிகளை ஒன்றிணைத்து ஸ்டாலின் கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.., மிகப்பெரிய கட்சியை கொண்டுள்ள திமுக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெரும்.., அப்படி வெற்றி பெற்று விட்டால் பிரதமரை தீர்மானிக்கும் கிங் மேக்கராக முதலமைச்சர் ஸ்டாலின் வருவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது..
பிரதமர் ஆகும் எண்ணம் :
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் பேசிய வார்த்தைகளை மொழி பெயர்த்து ஹிந்தியிலும் திமுக தொழில்நுட்ப அணியால் பகிரப்படுகின்றன.., இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது..
இதனால் வடமாநிலங்களிலும் காலடி தடத்தை பதித்து பிரதமர் வேட்பாளர் என்ற இடத்திற்கு செல்லுவார் என சில எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்..
உங்களுக்கு பிரதமராகும் எண்ணம் இருக்கிறதா என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு..,
தேசிய அரசியலில் திமுக மூன்றாவது கட்சியாக கால் பதித்து விட்டது.., காங்கிரஸ் கட்சி தலைவர் இந்திரா காந்தி அவர்களுக்கு உறுதுணையாக நின்று அவரை வெற்றி பெற வைத்தார்.., பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பக்க துணையாகா நின்று வெற்றி பெற வைத்தார்.., அப்போதும் என் தந்தையிடம் இதே கேள்வி எழுந்தது..,
அப்போது என் தந்தை சொன்ன பதில் என் உயரம் எனக்கு தெரியும்.., இந்திய கூட்டணியில் திமுக என்றும் முன்னிலை வகுக்கும்.., அதே போல என் உயரம் என்னவென்று எனக்கு தெரியும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக இந்திய கூட்டணியில் முன்னிலை வகிக்கும்.., பிரதம வேட்பாளராக நிற்பவருக்கு திமுக வெற்றி பெற வைக்கும் என பதில் கொடுத்துள்ளார்..
Discussion about this post