சென்னையில் தொடர் மாடு முட்டு சம்பவம்..! சற்று முன் வெளியான மற்றொரு அதிர்ச்சி தகவல்..!!
சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் அங்கு நடமாடும் மனிதர்களை முட்டி தாக்கி உயிரை மாய்க்கும் சம்பவம் தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை அரும்பாக்கத்தில் ஒரு சிறுமியை மாடு முட்டி பெரும் காயத்தை ஏற்படுத்தியது…
அதேபோல, பட்டாபிராம் பகுதியில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடந்தும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை…
மாநகராட்சி அதிகாரிகளும் அப்படிச் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து வைத்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள்..
ஆனால் மாட்டின் உரிமையாளர்கள் அபராத தொகையைச் செலுத்தி விட்டு மீண்டும் மாடுகளைச் சாலையில் சுற்ற விடுகின்றனர்…
கடந்த பத்து தினங்களுக்கு முன்பாக திருவல்லிக்கேணி டி.பி.கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் என்ற 74 வயது மாற்றுத் திறனாளி முதியவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்குச் சாலையில் நின்றுகொண்டிருந்த மாடு அந்த முதியவரை திடீரென முட்டித் தூக்கி வீசியது.
தூக்கி வீசப்படத்தில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு முதியவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. சம்பவமறிந்து பாதிக்கப்பட்டவரை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், இந்த மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த சூழலில் தீவிர சிகிச்சையிலிருந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனில்லாது பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாகவே திருவல்லிக்கேணி பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களை மாடு முட்டும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சாலையில் சுதந்திரமாகத் சுற்றி திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..