திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செல்வக்குமார் என்பவரது இடத்தில் குத்தகைக்கு எடுத்து பாஸ்கரானந்தா ஆசிரமம் ஒன்றை கட்டி வருகிறார். இதற்கிடையே, செல்வகுமார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஸ்கரானந்தா தனது ஆசிரமம் தரைமட்டமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தனது பக்தர்களுடன் சென்று புகாரளித்தார். மேலும் நித்யானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த பாஸ்கரானந்தா வாகனங்களில் ஏராளமான பக்தர்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல்துறை உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.
அவரிடம் பேசிய பாஸ்கரானந்தா ஐயா நான் நாலு நாளா சாப்பிடலங்கையா. நான் போய் பிச்சை எடுக்கிறதா. திருவோடு வாங்கி கொடுங்க பிச்சை எடுக்கிறேன். நான் இத தான் கேட்க முடியும். எனக்கு வாழ்வாதாரம் போச்சு. என் மனநிலை இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க. என் உயிர் போறதுக்குள்ள நீங்க காப்பாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் காவல்துறையை நம்பி வந்து இருக்கேன். தயவு செஞ்சி ஆன்மீகத்துல இருக்குறவன ரோட்ல நின்னு அழுக வைக்காதீங்க எனக் கூறியுள்ளார்.