ஆர்மி அதிகாரிகள் தாடி வைத்திருப்பார்களா..? சிவகார்த்திகேயன் பதிலடி..!!
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய்பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் தீபாவளி அன்று வெளியாக உள்ள படம் தான் அமரன்…
படத்தின் ப்ரோமோஷனுக்காக நேற்று சிவகார்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார்.. அங்கு அமரன் ட்ரைலர் தொகுப்பாளர்களுக்கு போட்டு காட்டப்பட்டது..
அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கிறது.. பிக் பாஸ் இயக்குனராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி தான் அமரன் படத்தின் இயக்குனர்..
கடந்த பிக்பாஸ் சீசன்-3 யின் போது, நடிகர் கமலஹாசன் அமரன் படத்தை பற்றி அறிவித்தார்.. அதேபோல் கமலஹாசனின் (ராஜ்கமல் பீலிம்ஸ் நிறுவனம் ) இப்படத்தை தயாரித்துள்ளது.. இந்த காரணங்களால் தான் அமரன் படமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் படத்தின் டீசர் ஒளிபரப்பு செய்யப்பட்டது.. என சிவகார்த்திகேயன் கூறினார்.
இந்நிலையில் அமரன் படத்தின் சில சர்ச்சைகள் எழுந்துள்ளது.. அதாவது ஆர்மியில் இருப்பவர்கள் தாடி வைத்திருக்க மாட்டார்கள்., ஆனால் அமரன் படத்தில் சிவா தாடி வைத்துள்ளார்… இது தவறு என சர்ச்சைகள் எழுந்தது..
இதற்கு சிவகார்த்திகேயன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பதிலடி கொடுத்துள்ளார்…
“அது 44 ராஷ்ட்ரியா ரைபிள்ஸ் என்று ஒரு ஸ்பெஷல் டீம். அவர்களுக்கு தாடி பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை. அவரகள் மக்களோடு மக்களாகவும் சில நேரம் இருப்பார்கள்..” இதை யாரும் பெரிதாக்கி விட வேண்டாம்.. என இவ்வாரே அவர் பதில் அளித்துள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..