“மாபெரும் அரசியல் சரித்திரம்” தலைவர் விஜய் கடிதம்..!! தொண்டர்களுக்கு வைத்த வேண்டுகோள்..!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.., அதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். அதை தொடர்ந்து கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் கட்சியின் கொடியும், கட்சியின் பூவும் வெளியிடப்பட்டு தற்போது நாளை மாநாடும் நடத்தப்படவுள்ளது..
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை நடக்கவுள்ளது.. அந்த மாநாட்டில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இருக்கை வசதி, மருத்துவ வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது..
இதற்கிடையில் தவெக தலைவர் விஜய், மாநாட்டில் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்க கூடாது., குழந்தைகள் அழைத்து வர வேண்டாம்., உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்க வேண்டாம் வீட்டில் இருந்த படியே மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்..
தற்போது மீண்டும் ஒரு பதிவை எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே, மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.
போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம். என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..